அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் துல்ஹுலைஃபா ஆகும். ஷாம்(சிரியா)வாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் “மஹ்யஆ” ஆகும். அதுவே அல்ஜுஹ்ஃபா எனும் இடமாகும். நஜ்த்வாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் “கர்ன்” ஆகும்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“யமன்வாசிகள் “இஹ்ராம்” கட்டும் இடம் யலம்லம் ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் (என்னிடம்) கூறினர்; (நேரடியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இதைச் செவியுறவில்லை.
Book : 15
(முஸ்லிம்: 2202)وحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«مُهَلُّ أَهْلِ الْمَدِينَةِ ذُو الْحُلَيْفَةِ، وَمُهَلُّ أَهْلِ الشَّامِ مَهْيَعَةُ، وَهِيَ الْجُحْفَةُ، وَمُهَلُّ أَهْلِ نَجْدٍ قَرْنٌ» قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: وَزَعَمُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَلَمْ أَسْمَعْ ذَلِكَ مِنْهُ – قَالَ: «وَمُهَلُّ أَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ»
Tamil-2202
Shamila-1182
JawamiulKalim-2033
சமீப விமர்சனங்கள்