அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது வாகன ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்த பிறகு “லப்பைக் அல்லாஹும்ம! லப்பைக் லப்பைக், லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க வல்முல்க்க, லா ஷரீக்க லக்” என்று தல்பியா கூறுவார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன “தல்பியா” ஆகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் என மக்கள் கூறினர்.
மேலும், இதனுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “லப்பைக் லப்பைக் வ சஅதைக். வல்கைரு பியதைக் லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்” என்றும் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாயிலிருந்து (நேரடியாகவே) தல்பியாவைக் கற்றேன்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.
Book : 15
(முஸ்லிம்: 2207)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، وَنَافِعٍ، مَوْلَى عَبْدِ اللهِ، وَحَمْزَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ، إِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً عِنْدَ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ، أَهَلَّ فَقَالَ: «لَبَّيْكَ اللهُمَّ، لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ» قَالُوا: وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، يَقُولُ: هَذِهِ تَلْبِيَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَافِعٌ: كَانَ عَبْدُ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ يَزِيدُ مَعَ هَذَا: «لَبَّيْكَ لَبَّيْكَ، وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ، وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ»
– وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: تَلَقَّفْتُ التَّلْبِيَةَ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِهِمْ
Tamil-2207
Shamila-1184
JawamiulKalim-2037
சமீப விமர்சனங்கள்