முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ஒருவர் நறுமணப்பொருளைப் பயன்படுத்திவிட்டுக் காலையில் “இஹ்ராம்” கட்டியவராக இருப்பதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் நறுமணம் கமழக் கமழக் காலையில் “இஹ்ராம்” கட்டியவனாக இருப்பதை விரும்பவில்லை. இவ்வாறு செய்வதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள். பின்னர் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு உமர் (ரலி) அவர்கள் “நான் நறுமணம் கமழக் கமழக் காலையில் “இஹ்ராம்” கட்டியவனாக இருப்பதை விரும்பவில்லை. இவ்வாறு செய்வதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” எனக்கூறினார்கள் என்று தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஹ்ராம்” கட்டியபோது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். பின்னர் அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டுப் பின்னர் காலையில் “இஹ்ராம்” கட்டியவராக இருந்தார்கள்” என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 15
(முஸ்லிம்: 2234)حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو كَامِلٍ، جَمِيعًا عَنْ أَبِي عَوَانَةَ، قَالَ سَعِيدٌ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، قَالَ
سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ الرَّجُلِ يَتَطَيَّبُ، ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا؟ فَقَالَ: مَا أُحِبُّ أَنْ أُصْبِحَ مُحْرِمًا أَنْضَخُ طِيبًا، لَأَنْ أَطَّلِيَ بِقَطِرَانٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَفْعَلَ ذَلِكَ، فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَأَخْبَرْتُهَا، أَنَّ ابْنَ عُمَرَ قَالَ: مَا أُحِبُّ أَنْ أُصْبِحَ مُحْرِمًا أَنْضَخُ طِيبًا، لَأَنْ أَطَّلِيَ بِقَطِرَانٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَفْعَلَ ذَلِكَ، فَقَالَتْ عَائِشَةُ: «أَنَا طَيَّبْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ إِحْرَامِهِ، ثُمَّ طَافَ فِي نِسَائِهِ، ثُمَّ أَصْبَحَ مُحْرِمًا»
Tamil-2234
Shamila-1192
JawamiulKalim-2063
சமீப விமர்சனங்கள்