தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2242

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என்னிடம்) ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஹ்ராம்” கட்டியிருந்த வேளையில், அவர்களுக்கு வேட்டைப்பிராணியின் இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறித்து எனக்கு நீங்கள் எவ்வாறு அறிவித்தீர்கள்?” என நினைவுபடுத்துமாறு கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேட்டைப்பிராணியின் இறைச்சியில் ஒரு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நாம் இதை உண்ணமாட்டோம். (ஏனெனில்) நாம் “இஹ்ராம்” கட்டியுள்ளோம்” என்று கூறினார்கள்” என்றார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2242)

وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ

قَدِمَ زَيْدُ بْنُ أَرْقَمَ، فَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ يَسْتَذْكِرُهُ: كَيْفَ أَخْبَرْتَنِي عَنْ لَحْمِ صَيْدٍ أُهْدِيَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ حَرَامٌ؟ قَالَ: قَالَ: أُهْدِيَ لَهُ عُضْوٌ مِنْ لَحْمِ صَيْدٍ فَرَدَّهُ، فَقَالَ: «إِنَّا لَا نَأْكُلُهُ إِنَّا حُرُمٌ»


Tamil-2242
Shamila-1195
JawamiulKalim-2068




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.