தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2251

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நான் “இஹ்ராம்” கட்டியிருந்த ஒரு குழுவினருடன் இருந்தேன். அப்போது நான் “இஹ்ராம்” கட்டாதிருந்தேன்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், “உங்களில் யாரேனும் ஒருவர் (அதைக் கொல்லுமாறு) அவருக்கு சைகை செய்தாரா? அல்லது ஏதேனும் உத்தரவிட்டாரா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் உண்ணுங்கள்” என்றார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2251)

وحَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، وَإِسْحَاقُ، عَنْ جَرِيرٍ، كِلَاهُمَا عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ، قَالَ

كَانَ أَبُو قَتَادَةَ فِي نَفَرٍ مُحْرِمِينَ، وَأَبُو قَتَادَةَ مُحِلٌّ، وَاقْتَصَّ الْحَدِيثَ، وَفِيهِ: قَالَ: «هَلْ أَشَارَ إِلَيْهِ إِنْسَانٌ مِنْكُمْ أَوْ أَمَرَهُ بِشَيْءٍ؟» قَالُوا: لَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: «فَكُلُوا»


Tamil-2251
Shamila-1196
JawamiulKalim-2073




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.