ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றும் எண்ணத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) “சரிஃப்” எனும் இடத்திற்கு நாங்கள் வந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம் “உன் அழுகைக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஆண்டு நான் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டு வந்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன்” என்று கூறினேன். அவர்கள், “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது போலும்!” என்றார்கள். நான், “ஆம்” என்றேன். அப்போது, “இ(ந்த மாதவிடாயான)து பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கிய ஒன்றாகும். எனவே, நீ தூய்மையாகும்வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்யும் மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்” என்று சொன்னார்கள்.
நான் மக்காவை அடைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “உங்கள் இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றறிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர். அப்போது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் வசதி படைத்த இன்னும் சிலரிடம் பலிப் பிராணிகள் இருந்தன. (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய) அவர்கள் (துல்ஹஜ் எட்டாவது நாளில் மினாவிற்குச்) சென்றபோது ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டி, “தல்பியா” கூறினர். “நஹ்ரு”டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நான் (மாதவிடாயிலிருந்து) தூய்மையானபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உத்தரவின் பேரில், நான் “தவாஃபுல் இஃபாளா”செய்தேன். பின்னர் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான் “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காகக் குர்பானி கொடுத்தார்கள் (அதுதான் இந்த இறைச்சி)” என்று கூறினர்.
முஹஸ்ஸபில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவில் நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்பிச் செல்ல, நானோ ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றிச் செல்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் (என்னைத் தன்ஈமுக்கு அழைத்துச் சென்று, அங்கு உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது ஒட்டகத்தில் அமர்த்திக்கொண்டு சென்றார். நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் இளவயதுப் பெண்ணாக இருந்தேன். (ஒட்டகத்தில் அமர்ந்து சென்றபோது) நான் குட்டித்தூக்கம் போடுவேன். அப்போது எனது முகம் (ஒட்டகத்தின் சேணத்திலுள்ள) சாய்வுக் கட்டையில் இடித்துக்கொள்ளும். நாங்கள் இருவரும் தன்ஈமுக்கு வந்து சேர்ந்த போது, அங்கு நான் உம்ராவிற்காக “தல்பியா”கூறினேன். அது, மக்கள் முன்பே நிறைவேற்றிய உம்ராவிற்குப் பகரமாக அமைந்தது.
Book : 15
(முஸ்லிம்: 2307)حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللهِ أَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ
خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَذْكُرُ إِلَّا الْحَجَّ، حَتَّى جِئْنَا سَرِفَ فَطَمِثْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ؟» فَقُلْتُ: وَاللهِ، لَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ خَرَجْتُ الْعَامَ، قَالَ: «مَا لَكِ؟ لَعَلَّكِ نَفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «هَذَا شَيْءٌ كَتَبَهُ اللهُ عَلَى بَنَاتِ آدَمَ، افْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي» قَالَتْ: فَلَمَّا قَدِمْتُ مَكَّةَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ «اجْعَلُوهَا عُمْرَةً» فَأَحَلَّ النَّاسُ إِلَّا مَنْ كَانَ مَعَهُ الْهَدْيُ، قَالَتْ: فَكَانَ الْهَدْيُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَذَوِي الْيَسَارَةِ، ثُمَّ أَهَلُّوا حِينَ رَاحُوا، قَالَتْ: فَلَمَّا كَانَ يَوْمُ النَّحْرِ طَهَرْتُ، فَأَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَفَضْتُ، قَالَتْ: فَأُتِيَنَا بِلَحْمِ بَقَرٍ، فَقُلْتُ: مَا هَذَا؟ فَقَالُوا: أَهْدَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ الْبَقَرَ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، يَرْجِعُ النَّاسُ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَأَرْجِعُ بِحَجَّةٍ؟ قَالَتْ: فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، فَأَرْدَفَنِي عَلَى جَمَلِهِ، قَالَتْ: فَإِنِّي لَأَذْكُرُ، وَأَنَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ، أَنْعَسُ فَيُصِيبُ وَجْهِي مُؤْخِرَةَ الرَّحْلِ، حَتَّى جِئْنَا إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ مِنْهَا بِعُمْرَةٍ، جَزَاءً بِعُمْرَةِ النَّاسِ الَّتِي اعْتَمَرُوا
Tamil-2307
Shamila-1211
JawamiulKalim-2122
சமீப விமர்சனங்கள்