ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள், அல்லது ஐந்தாவது நாள் அன்று (மக்காவிற்கு) வந்தார்கள். அப்போது நானிருந்த இடத்திற்குக் கோபத்துடன் வந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கோபப்படுத்தியவர் யார்? அவரை, அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பானாக!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உனக்குத் தெரியுமா? நான் மக்களிடம் (பலிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக்கொள்ளட்டும் என) ஓர் உத்தரவு பிறப்பித்தேன். ஆனால், அவர்களோ தயக்கம் காட்டுகிறார்கள். நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், (என்னுடன்) பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கமாட்டேன்; இங்கு வந்த பிறகு வாங்கியிருப்பேன்; பின்னர் மக்கள் (தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி) இஹ்ராமிலிருந்து விடுபட்டதைப் போன்று நானும் விடுபட்டிருப்பேன்” என்றார்கள்.
(ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் தயக்கம் காட்டுவதைப் போன்றுள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எண்ணுகிறேன் என இடம் பெற்றுள்ளது.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 15
(முஸ்லிம்: 2317)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، جَمِيعًا عَنْ غُنْدَرٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ ذَكْوَانَ، مَوْلَى عَائِشَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ
قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ، أَوْ خَمْسٍ، فَدَخَلَ عَلَيَّ وَهُوَ غَضْبَانُ فَقُلْتُ: مَنْ أَغْضَبَكَ، يَا رَسُولَ اللهِ؟ أَدْخَلَهُ اللهُ النَّارَ، قَالَ: «أَوَمَا شَعَرْتِ أَنِّي أَمَرْتُ النَّاسَ بِأَمْرٍ، فَإِذَا هُمْ يَتَرَدَّدُونَ؟» – قَالَ الْحَكَمُ: كَأَنَّهُمْ يَتَرَدَّدُونَ أَحْسِبُ – «وَلَوْ أَنِّي اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ، مَا سُقْتُ الْهَدْيَ مَعِي حَتَّى أَشْتَرِيَهُ، ثُمَّ أَحِلُّ كَمَا حَلُّوا»
Tamil-2317
Shamila-1211
JawamiulKalim-2129
சமீப விமர்சனங்கள்