தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2319

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டி (மக்காவிற்கு) வந்தேன். இறையில்லாம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு முன்பே எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, (தவாஃபைத் தவிர உம்ராவின்) அனைத்துக் கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டு, ஹஜ்ஜுக்காக (“இஹ்ராம்” கட்டி) “தல்பியா” கூறினேன். (மினாவிலிருந்து) புறப்படும் (நஃப்ருடைய) நாளில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (கஅபாவைச்) சுற்றி வந்ததே உனது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் போதுமானதாகும். (எனவே, நீ உம்ராச் செய்ய வேண்டிய தில்லை)” என்று சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்க மறுத்துவிட்டேன். ஆகவே, என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் “தன்ஈமு”க்கு அனுப்பி வைத்தார்கள். நான் ஹஜ் முடிந்த பின் உம்ராச் செய்தேன்.

Book : 15

(முஸ்லிம்: 2319)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا

أَنَّهَا أَهَلَّتْ بِعُمْرَةٍ، فَقَدِمَتْ وَلَمْ تَطُفْ بِالْبَيْتِ حَتَّى حَاضَتْ، فَنَسَكَتِ الْمَنَاسِكَ كُلَّهَا، وَقَدْ أَهَلَّتْ بِالْحَجِّ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَوْمَ النَّفْرِ «يَسَعُكِ طَوَافُكِ لِحَجِّكِ وَعُمْرَتِكِ» فَأَبَتْ، فَبَعَثَ بِهَا مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ


Tamil-2319
Shamila-1211
JawamiulKalim-2130




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.