ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றிவிட்டு) இரு நற்பலன்களுடன் திரும்பிச் செல்ல, நான் மட்டும் (ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றி அதற்குரிய) ஒரு நற்பலனுடன் திரும்பிச் செல்வதா?” என்று கேட்டேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் என்னைத் “தன்ஈமு”க்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அப்துர் ரஹ்மான் (ரலி) என்னைத் தமது ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்(டு, தன்ஈமை நோக்கிப் பயணம் மேற்கொண்)டார். அப்போது நான் எனது முகத்திரையை உயர்த்தி, கழுத்து வழியாக அதைக் கழற்றலானேன். உடனே அவர் தமது ஒட்டகத்தை அடிப்பதைப் போன்று எனது காலில் அடித்தார். நான் அவரிடம், “(அந்நிய ஆண்கள்) எவரேனும் (என்னைப் பார்ப்பதைக்) காண்கிறீரா? (பிறகு ஏன் என்னை அடிக்கிறீர்?)” என்று கேட்டேன். பிறகு நான் (தன்ஈமில்) உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டி, “தல்பியா” சொன்னேன். (உம்ரா முடிந்த பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர்கள் “முஹஸ்ஸபி”ல் தங்கியிருந்தார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2321)وحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا قُرَّةُ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، حَدَّثَتْنَا صَفِيَّةُ بِنْتُ شَيْبَةَ، قَالَتْ
قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا يَا رَسُولَ اللهِ: أَيَرْجِعُ النَّاسُ بِأَجْرَيْنِ وَأَرْجِعُ بِأَجْرٍ؟ «فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَنْطَلِقَ بِهَا إِلَى التَّنْعِيمِ»، قَالَتْ: فَأَرْدَفَنِي خَلْفَهُ عَلَى جَمَلٍ لَهُ، قَالَتْ: فَجَعَلْتُ أَرْفَعُ خِمَارِي أَحْسُرُهُ عَنْ عُنُقِي، فَيَضْرِبُ رِجْلِي بِعِلَّةِ الرَّاحِلَةِ، قُلْتُ لَهُ: وَهَلْ تَرَى مِنْ أَحَدٍ؟ قَالَتْ: فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ، ثُمَّ أَقْبَلْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْحَصْبَةِ
Tamil-2321
Shamila-1211
JawamiulKalim-2132
சமீப விமர்சனங்கள்