தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2344

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(ஹஜ் பருவத்தில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டி, அதை நிறைவேற்றிவிட்டுப் பிறகு துல்ஹஜ் எட்டாவது நாள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிப் பயனடையும் முறையான) “தமத்துஉ” செல்லும்” என நான் மார்க்கத் தீர்ப்பு வழங்கிவந்தேன். இந்நிலையில் என்னிடம் ஒரு மனிதர் (வந்து), “நீங்கள் உங்களது தீர்ப்பொன்றை நிறுத்திவையுங்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர் -ரலி) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகள் விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார். நான் பின்னால் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும்,ஹாஜிகள் தம் துணைவியருடன் (அரஃபாவில் உள்ள) “அராக்” பகுதியில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு (குளித்து)விட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்) செல்வதை நான் வெறுத்தேன் (ஆகவேதான், ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)” என்றார்கள். – இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2344)

وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِي مُوسَى

أَنَّهُ كَانَ يُفْتِي بِالْمُتْعَةِ، فَقَالَ لَهُ رَجُلٌ: رُوَيْدَكَ بِبَعْضِ فُتْيَاكَ، فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي النُّسُكِ بَعْدُ، حَتَّى لَقِيَهُ بَعْدُ، فَسَأَلَهُ، فَقَالَ عُمَرُ: «قَدْ عَلِمْتُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ فَعَلَهُ، وَأَصْحَابُهُ، وَلَكِنْ كَرِهْتُ أَنْ يَظَلُّوا مُعْرِسِينَ بِهِنَّ فِي الْأَرَاكِ، ثُمَّ يَرُوحُونَ فِي الْحَجِّ تَقْطُرُ رُءُوسُهُمْ»


Tamil-2344
Shamila-1222
JawamiulKalim-2153




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.