தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2367

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

(ஹஜ், உம்ராவை நிறைவேற்ற முடியாமல் எதிரிகளால்) தடுக்கப்பட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்; ஒரே இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (கிரான்) செய்யலாம் என்பதன் விளக்கம்.

 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவில் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் முற்றுகை யிட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா சம்பவத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறி விட்டு, உம்ராவிற்காக (“இஹ்ராம்” கட்டி) தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள். “பைதாஉ” எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, “(தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில் ஹஜ், உம்ரா ஆகிய) அவையிரண்டும் ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு இறையில்லம் கஅபாவிற்கு வந்து, அதை ஏழுமுறை சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; ஸஃபா மற்றும் மர்வா இடையேயும் ஏழு முறை சுற்றி (சயீ) வந்தார்கள். அதைவிடக் கூடுதலாக்கவில்லை. அதுவே (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும்) போதுமானதாகும் என்று கருதினார்கள்; பலிப்பிராணியை அறுத்துப் பலியிடவும் செய்தார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2367)

26 – بَابُ بَيَانِ جَوَازِ التَّحَلُّلِ بِالْإِحْصَارِ وَجَوَازِ الْقِرَانِ

وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ نَافِعٍ

أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، خَرَجَ فِي الْفِتْنَةِ مُعْتَمِرًا وَقَالَ: ” إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ فَأَهَلَّ بِعُمْرَةٍ وَسَارَ، حَتَّى إِذَا ظَهَرَ عَلَى الْبَيْدَاءِ الْتَفَتَ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ: مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْحَجَّ مَعَ الْعُمْرَةِ، فَخَرَجَ حَتَّى إِذَا جَاءَ الْبَيْتَ طَافَ بِهِ سَبْعًا، وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، سَبْعًا. لَمْ يَزِدْ عَلَيْهِ، وَرَأَى أَنَّهُ مُجْزِئٌ عَنْهُ، وَأَهْدَى


Tamil-2367
Shamila-1230
JawamiulKalim-2172




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.