தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2371

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதும் (கிரான்), ஹஜ்ஜை மட்டும் தனியாகச் செய்வதும் (இஃப்ராத்).

 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (“விடைபெறும்” ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு மட்டும் (“இஹ்ராம்” கட்டி) தல்பியாச் சொன்னோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் (“இஹ்ராம்” கட்டி) தல்பியாச் சொன்னார்கள்” என இடம் பெற்றுள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2371)

27 – بَابٌ فِي الْإِفْرَادِ وَالْقِرَانِ بِالْحَجِّ وَالْعُمْرَةِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَعَبْدُ اللهِ بْنُ عَوْنٍ الْهِلَالِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ – فِي رِوَايَةِ يَحْيَى – قَالَ

«أَهْلَلْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ مُفْرَدًا، – وَفِي رِوَايَةِ ابْنِ عَوْنٍ – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهَلَّ بِالْحَجِّ مُفْرَدًا»


Tamil-2371
Shamila-1231
JawamiulKalim-2175




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.