வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “நான் ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவுடன், இறையில்லம் கஅபாவைச் சுற்றி வரலாமா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “(அவ்வாறு கஅபாவைச் சுற்றிவர) உமக்கு என்ன தடை?”என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “இன்ன மனிதரின் புதல்வர் அவ்வாறு (தவாஃப்) செய்வதை வெறுப்பதை நான் கண்டேன். ஆனால், அவரைவிட நீங்களே எங்கள் அன்புக்குரியவர்.(பஸ்ராவின் ஆளுநரான) அவரை உலகம் சோதித்துவிட்டிருக்கிறது” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நம்மில் யாரைத்தான்” அல்லது “உங்களில் யாரைத் தான்” இவ்வுலகம் சோதிக்காமல் விட்டது?” என்று கூறிவிட்டுப் பின்னர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவுடன் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடி (சயீ) வந்ததையும் நாங்கள் கண்டோம். நீர் (ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், அல்லாஹ்வின் நெறியையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் பின்பற்றுவதே இன்ன மனிதரின் வழிமுறையை நீர் பின்பற்றுவதைவிட மிகவும் தகுதியானதாகும்” என்று கூறினார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2375)وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ بَيَانٍ، عَنْ وَبَرَةَ، قَالَ
سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَطُوفُ بِالْبَيْتِ وَقَدْ أَحْرَمْتُ بِالْحَجِّ؟ فَقَالَ: وَمَا يَمْنَعُكَ؟ قَالَ: إِنِّي رَأَيْتُ ابْنَ فُلَانٍ يَكْرَهُهُ وَأَنْتَ أَحَبُّ إِلَيْنَا مِنْهُ، رَأَيْنَاهُ قَدْ فَتَنَتْهُ الدُّنْيَا، فَقَالَ: وَأَيُّنَا – أَوْ أَيُّكُمْ – لَمْ تَفْتِنْهُ الدُّنْيَا؟ ثُمَّ قَالَ: «رَأَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْرَمَ بِالْحَجِّ، وَطَافَ بِالْبَيْتِ، وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ»، فَسُنَّةُ اللهِ وَسُنَّةُ رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ تَتَّبِعَ مِنْ سُنَّةِ فُلَانٍ، إِنْ كُنْتَ صَادِقًا
Tamil-2375
Shamila-1233
JawamiulKalim-2179
சமீப விமர்சனங்கள்