தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2395

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அதாஉ (ரஹ்) அவர்கள், “ஹஜ் செய்பவரோ மற்றவரோ (அதாவது உம்ராச் செய்பவரோ) இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்” என்று அறிவித்தார்கள்.

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பின்னர் அவை (பலிப்பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழைமையான அந்த ஆலயமாகும்” எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்கள் “விடைபெறும்” ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள்” என்றார்கள்.

நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், “அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2395)

وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ

كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: لَا يَطُوفُ بِالْبَيْتِ حَاجٌّ وَلَا غَيْرُ حَاجٍّ إِلَّا حَلَّ، قُلْتُ لِعَطَاءٍ: مِنْ أَيْنَ يَقُولُ ذَلِكَ؟ قَالَ: مِنْ قَوْلِ اللهِ تَعَالَى: {ثُمَّ مَحِلُّهَا إِلَى الْبَيْتِ الْعَتِيقِ} [الحج: 33] قَالَ: قُلْتُ: فَإِنَّ ذَلِكَ بَعْدَ الْمُعَرَّفِ، فَقَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: هُوَ بَعْدَ الْمُعَرَّفِ وَقَبْلَهُ، وَكَانَ يَأْخُذُ ذَلِكَ مِنْ أَمْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ «أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الْوَدَاعِ»


Tamil-2395
Shamila-1245
JawamiulKalim-2195




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.