முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறையோடு சாய்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் நேரத்தொழுகை (ளுஹா) தொழுதுகொண்டிருந்தனர். நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் அந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “இது (மார்க்க அடிப்படையற்ற) புதிய நடைமுறை (பித்அத்)”என்றார்கள்.122 பிறகு அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான்கு உம்ராக்கள் செய்தார்கள்; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள். நாங்கள் அவர்களது சொல்லைப் பொய்யாக்கவோ அதை மறுக்கவோ விரும்பவில்லை. இதற்கிடையே அறையினுள் ஆயிஷா (ரலி) அவர்கள் பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் அவர்கள் சொல்வதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அவர் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது என்று சொல்கிறார்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராச் செய்யும்போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார் (இப்போது மறந்துவிட்டார் போலும்!). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்ததே இல்லை” என்று கூறினார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2407)وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ
دَخَلْتُ أَنَا وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ الْمَسْجِدَ، فَإِذَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ جَالِسٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ، وَالنَّاسُ يُصَلُّونَ الضُّحَى فِي الْمَسْجِدِ، فَسَأَلْنَاهُ عَنْ صَلَاتِهِمْ؟ فَقَالَ: بِدْعَةٌ، فَقَالَ لَهُ عُرْوَةُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، كَمِ اعْتَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، فَقَالَ: أَرْبَعَ عُمَرٍ، إِحْدَاهُنَّ فِي رَجَبٍ، فَكَرِهْنَا أَنْ نُكَذِّبَهُ وَنَرُدَّ عَلَيْهِ، وَسَمِعْنَا اسْتِنَانَ عَائِشَةَ فِي الْحُجْرَةِ، فَقَالَ عُرْوَةُ: أَلَا تَسْمَعِينَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِلَى مَا يَقُولُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَتْ: وَمَا يَقُولُ؟ قَالَ: يَقُولُ: اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ عُمَرٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ فَقَالَتْ: يَرْحَمُ اللهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ «مَا اعْتَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا وَهُوَ مَعَهُ، وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ»
Tamil-2407
Shamila-1255
JawamiulKalim-2208
சமீப விமர்சனங்கள்