தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2453

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45

ஹஜ் செய்பவர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று “ஜம்ரத்துல் அகபா”வில் கல்லெறியத் துவங்கும்வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது விரும்பத் தக்கதாகும்.

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(“விடைபெறும்” ஹஜ்ஜின்போது) அரஃபாவிலிருந்து திரும்புகையில் நான் வாகனத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடப்புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை மண்டியிடவைத்துவிட்டுச் சென்று, சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பிவந்தார்கள். நான் அவர்களுக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்யத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள். நான், “தொழப்போகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான்” எனக் கூறி விட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள்.

பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் அதிகாலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான குறைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜம்ரா”வை அடையும்வரை “தல்பியா” சொல்லிக்கொண்டே இருந்தார்கள் என ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 15

(முஸ்லிம்: 2453)

45 – بَابُ اسْتِحْبَابِ إِدَامَةِ الْحَاجِّ التَّلْبِيَةَ حَتَّى يَشْرَعَ فِي رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لَهُ – قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ

«رَدِفْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَاتٍ، فَلَمَّا بَلَغَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشِّعْبَ الْأَيْسَرَ، الَّذِي دُونَ الْمُزْدَلِفَةِ أَنَاخَ فَبَالَ، ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ الْوَضُوءَ، فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا»، ثُمَّ قُلْتُ: الصَّلَاةَ يَا رَسُولَ اللهِ، فَقَالَ: «الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ، فَصَلَّى، ثُمَّ رَدِفَ الْفَضْلُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ جَمْعٍ»

– قَالَ كُرَيْبٌ: فَأَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الْجَمْرَةَ»


Tamil-2453
Shamila-1280
JawamiulKalim-2253




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.