தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2455

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (“விடைபெறும்” ஹஜ் பயணத்தின் போது) அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்தவரான ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அரஃபா நாள்” மாலையிலும் “முஸ்தலிஃபா நாள்” காலையிலும் திரும்பிக்கொண்டிருந்த மக்களிடம், “மெதுவாகச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மினாவிலுள்ள “முஹஸ்ஸிர்” ஓடைக்குள் நுழைந்ததும், “ஜம்ராவில் எறிவதற்காக, சுண்டி எறியப்படும் சிறு கற்களை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜம்ரத்துல் அகபா”வில் கல்லெறியும் வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜம்ரத்துல் அகபா”வில் கல்லெறியும்வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும் அதில், (“சுண்டி எறியப்படும் சிறுகற்கள்” என்று கூறும்போது) “ஒரு மனிதன் கல் சுண்டி விளையாடுவதைப் போன்று தமது கையால் சைகை செய்தார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2455)

وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَكَانَ رَدِيفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ

فِي عَشِيَّةِ عَرَفَةَ وَغَدَاةِ جَمْعٍ لِلنَّاسِ حِينَ دَفَعُوا «عَلَيْكُمْ بِالسَّكِينَةِ» وَهُوَ كَافٌّ نَاقَتَهُ، حَتَّى دَخَلَ مُحَسِّرًا – وَهُوَ مِنْ مِنًى – قَالَ: «عَلَيْكُمْ بِحَصَى الْخَذْفِ الَّذِي يُرْمَى بِهِ الْجَمْرَةُ» وَقَالَ: «لَمْ يَزَلْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي، حَتَّى رَمَى الْجَمْرَةَ»

– وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ وَلَمْ يَزَلْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ وَزَادَ فِي حَدِيثِهِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ بِيَدِهِ كَمَا يَخْذِفُ الْإِنْسَانُ


Tamil-2455
Shamila-1282
JawamiulKalim-2256




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.