பாடம் : 47
அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவிற்குத் திரும்புவதும், அந்த இரவில் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷா ஆகிய இருதொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதும்.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 9ஆவது நாள்) அரஃபாவிலிருந்து (முஸ் தலிஃபாவிற்குத்) திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் (மும்முறை உறுப்புகளைக் கழுவி) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை (சுருக்கமாகவே செய்தார்கள்). நான் அவர்களிடம், “(மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்று அவர்கள் கூறி, வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத்தைத் தத்தமது கூடாரத்தில் படுக்க வைத்தனர். பிறகு இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் இஷாத் தொழுதார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே நபியவர்கள் (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.
Book : 15
47 – بَابُ الْإِفَاضَةِ مِنْ عَرَفَاتٍ إِلَى الْمُزْدَلِفَةِ وَاسْتِحْبَابِ صَلَاتَيِ الْمَغْرِبِ وَالْعِشَاءِ جَمِيعًا بِالْمُزْدَلِفَةِ فِي هَذِهِ اللَّيْلَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ
دَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ، فَقُلْتُ لَهُ: الصَّلَاةَ، قَالَ: الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ، فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ، فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الْعِشَاءُ فَصَلَّاهَا، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا
Tamil-2463
Shamila-1280
JawamiulKalim-2264
சமீப விமர்சனங்கள்