தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2566

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67

“விடைபெறும்” தவாஃப் (“தவாஃபுல் வதா”) கடமையாகும் என்பதும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு அந்தக் கடமையில்லை என்பதும்.

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஹஜ்ஜை முடித்ததும்) மக்கள் பல்வேறு முனைகளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஹஜ் செய்த) எவரும் இறையில்லம் கஅபாவை இறுதியாகச் சந்தித்(து தவாஃப் செய்)திடாமல் மக்காவிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டாம்!” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2566)

67 – بابُ وُجُوبِ طَوَافِ الْوَدَاعِ وَسُقُوطِهِ عَنِ الْحَائِضِ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الْأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

كَانَ النَّاسُ يَنْصَرِفُونَ فِي كُلِّ وَجْهٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ»، قَالَ زُهَيْرٌ: يَنْصَرِفُونَ كُلَّ وَجْهٍ، وَلَمْ يَقُلْ: فِي


Tamil-2566
Shamila-1327
JawamiulKalim-2358




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.