தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2571

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(துல்ஹஜ் பத்தாவது நாளில்) “தவாஃபுல் இஃபாளா” செய்வதற்கு முன்பு ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமோ என நாங்கள் அஞ்சிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, “ஸஃபிய்யா நம்மை (புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “அவர் “தவாஃபுல் இஃபாளா” செய்துவிட்டார்” என்று கூறினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியானால் பிரச்சினையில்லை” என்று சொன்னார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2571)

وحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا أَفْلَح، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

كُنَّا نَتَخَوَّفُ أَنْ تَحِيضَ صَفِيَّةُ قَبْلَ أَنْ تُفِيضَ، قَالَتْ: فَجَاءَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَحَابِسَتُنَا صَفِيَّةُ؟» قُلْنَا: قَدْ أَفَاضَتْ، قَالَ: «فَلَا إِذَنْ»


Tamil-2571
Shamila-1211
JawamiulKalim-2362




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.