ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(“விடைபெறும்” ஹஜ்ஜின்போது) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிடுவார் போலிருக்கிறதே! அவர் உங்களுடன் “தவாஃப்” (இஃபாளா) செய்யவில்லையா?”என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம் (செய்துவிட்டார்)” என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்படியானால் நீங்கள் புறப்படுங்கள்!” என்று சொன்னார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2572)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ
أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ قَدْ حَاضَتْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّهَا تَحْبِسُنَا. أَلَمْ تَكُنْ قَدْ طَافَتْ مَعَكُنَّ بِالْبَيْتِ؟» قَالُوا: بَلَى، قَالَ: «فَاخْرُجْنَ»
Tamil-2572
Shamila-1211
JawamiulKalim-2363
சமீப விமர்சனங்கள்