நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய சமுதாயத்தார் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தை (விடச் சற்று)க் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்திற்கு அதை நீங்கள் மாற்றிவிடலாமல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், அவ்வாறே நான் செய்திருப்பேன்” என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
(நான் இந்த ஹதீஸை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (அவர்களிடம் தெரிவித்தபோது) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருந்தால் அது சரியே! (இறையில்லம் கஅபாவின்) “ஹிஜ்ர்” பகுதியை அடுத்துள்ள இரு (ஷாமிய) மூலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிடாததற்குக் காரணம், இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீது இறையில்லம் முழுமையாக்கப்படாமல் இருந்ததே ஆகும் என்று நான் கருதுகிறேன்”என்றார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2586)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَخْبَرَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ حِينَ بَنَوْا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ» قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَفَلَا تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَفَعَلْتُ»، فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: «لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أُرَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلَامَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ، إِلَّا أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ»
Tamil-2586
Shamila-1333
JawamiulKalim-2376
சமீப விமர்சனங்கள்