தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-260

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னை அ(ந்த வான)வர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குக் கொண்டுசென்றார்கள். என் நெஞ்சைப் பிளந்து, (இதயத்தை வெளியிலெடுத்து) ஸம்ஸம் கிணற்றின் நீரால் (என் இதயம்) கழுவப்பட்டது. பிறகு மீண்டும் (அதே இடத்திற்கு) நான் கொண்டுவந்து விடப்பட்டேன்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 1

(முஸ்லிம்: 260)

حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أُتِيتُ فَانْطَلَقُوا بِي إِلَى زَمْزَمَ، فَشُرِحَ عَنْ صَدْرِي، ثُمَّ غُسِلَ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ أُنْزِلْتُ»


Tamil-260
Shamila-162
JawamiulKalim-239




2 comments on Muslim-260

  1. நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன். பின்பு அன்னையே! எனக்கு நபி நாயகத்தின் மற்றும் அவர்களின் இரு தோழர்களின்(அபூபக்கர்,உமர்)ரலியல்லாஹூ அன்ஹும் கப்றுகளை திறந்து காட்டுங்கள் என்றேன். அவர்கள் எனக்கு மூன்று கப்றுகளையும் திறந்து காட்டினார்கள். அவைகள் மிகவும் உயரமில்லாமலும் தரை மட்டமாக இல்லாமலும் சிகப்பு கற்கலால் பதிக்கப்பட்டு இருந்தன . என காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபீபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல் : அபூதாவூத், மிர்காத் 167,379,380 பாகம் 2 விளக்கம் தேவை

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.