தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2628

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 81

மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தவர், ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிய பின் மூன்று நாட்களுக்கு மிகாமல் மக்காவில் தங்கியிருக்கலாம்.

 அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (முஹாஜிர் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, மினாவிலிருந்து திரும்பிய பிறகு) மக்காவில் தங்குவது பற்றி (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு சாயிப் (ரலி) அவர்கள், “முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்க அனுமதி உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். “அதைவிட அதிகமாக்கக் கூடாது” என்று சொன்னதைப் போன்று இருந்தது.

Book : 15

(முஸ்லிம்: 2628)

81 – بَابُ جَوَازِ الْإِقَامَةِ بِمَكَّةَ لِلْمُهَاجِرِ مِنْهَا بَعْدَ فَرَاغِ الْحَجِّ وَالْعُمْرَةِ، ثَلَاثَةَ أَيَّامٍ بِلَا زِيَادَةٍ

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ

أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، يَسْأَلُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: هَلْ سَمِعْتَ فِي الْإِقَامَةِ بِمَكَّةَ شَيْئًا؟ فَقَالَ السَّائِبُ: سَمِعْتُ الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لِلْمُهَاجِرِ إِقَامَةُ ثَلَاثٍ بَعْدَ الصَّدَرِ بِمَكَّةَ»، «كَأَنَّهُ يَقُولُ لَا يَزِيدُ عَلَيْهَا»


Tamil-2628
Shamila-1352
JawamiulKalim-2416




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.