ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான யுஹன்னஸ் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்ட) குழப்பமான காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து சலாம் சொல்லிவிட்டு, “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே,நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகிறேன்” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமைநாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2669)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ قَطَنِ بْنِ وَهْبِ بْنِ عُوَيْمِرِ بْنِ الْأَجْدَعِ، عَنْ يُحَنَّسَ، مَوْلَى الزُّبَيْرِ، أَخْبَرَهُ
أَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فِي الْفِتْنَةِ، فَأَتَتْهُ مَوْلَاةٌ لَهُ تُسَلِّمُ عَلَيْهِ، فَقَالَتْ: إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ، يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، اشْتَدَّ عَلَيْنَا الزَّمَانُ، فَقَالَ لَهَا عَبْدُ اللهِ: اقْعُدِي لَكَاعِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَصْبِرُ عَلَى لَأْوَائِهَا وَشِدَّتِهَا أَحَدٌ، إِلَّا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ»
Tamil-2669
Shamila-1377
JawamiulKalim-2454
சமீப விமர்சனங்கள்