தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2690

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 93

“உஹுத்”” மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்.

 அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் “தபூக்” போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். பிறகு நாங்கள் (போரை முடித்துக்கொண்டு மதீனாவிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள) “வாதில் குரா” எனும் இடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் விரைந்து மதீனா செல்லப் போகிறேன். எனவே, உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைந்து வரலாம். விரும்பியவர் (இங்கேயே) தங்கியிருக்கலாம்” என்று சொன்னார்கள். நாங்கள் புறப்பட்டு மதீனாவை நெருங்கியபோது, “இது “தாபா” (தூய நகரம்) ஆகும்; இது உஹுத் மலை; இது நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2690)

93 – بَابُ أُحُدٌ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ، قَالَ

خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ، ثُمَّ أَقْبَلْنَا حَتَّى قَدِمْنَا وَادِي الْقُرَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي مُسْرِعٌ، فَمَنْ شَاءَ مِنْكُمْ فَلْيُسْرِعْ مَعِي، وَمَنْ شَاءَ فَلْيَمْكُثْ»، فَخَرَجْنَا حَتَّى أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ، فَقَالَ: «هَذِهِ طَابَةُ، وَهَذَا أُحُدٌ، وَهُوَ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ»


Tamil-2690
Shamila-1392
JawamiulKalim-2474




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.