தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2701

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96

“இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல்” என்பது, மதீனாவிலுள்ள “மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல் ஆகும்.

 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அப்துர் ரஹ்மான் பின் அபீ சயீத் அல்குத்ரீ (ரஹ்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களிடம் நான், “இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என 9:108ஆவது வசனத்தில் கூறப்பெற்றுள்ளது) குறித்து தங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் எவ்வாறு செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் சயீத் (ரஹ்) அவர்கள், “என் தந்தை (அபூ சயீத் அல்குத்ரீ – ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (மஸ்ஜிதுந் நபவீ மற்றும் மஸ்ஜிதுல் குபா இவ்விரு பள்ளிவாசல்களில் இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளது) எது?” என்று கேட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி, அதைப் பூமியில் எறிந்தார்கள். பிறகு இதோ உங்களது இந்தப் பள்ளிவாசல்தான் என்று (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலைக் குறிப்பிட்டுச்) சொன்னார்கள்” என்றார்கள். நான் (அப்துர் ரஹ்மான் பின் அபீ சயீத் (ரஹ்) அவர்களிடம்) “தங்கள் தந்தையிடமிருந்து நானும் இவ்வாறே செவியுற்றேன் என நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினேன்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அப்துர் ரஹ்மான் பின் அபீசயீத் (ரஹ்) அவர்களைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.

Book : 15

(முஸ்லிம்: 2701)

96 – بَابُ بَيَانِ أَنَّ الْمَسْجِدَ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى هُوَ مَسْجِدُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ الْخَرَّاطِ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ

مَرَّ بِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قُلْتُ لَهُ: كَيْفَ سَمِعْتَ أَبَاكَ يَذْكُرُ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى؟ قَالَ: قَالَ أَبِي: دَخَلْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ بَعْضِ نِسَائِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الْمَسْجِدَيْنِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى؟ قَالَ: فَأَخَذَ كَفًّا مِنْ حَصْبَاءَ، فَضَرَبَ بِهِ الْأَرْضَ، ثُمَّ قَالَ: «هُوَ مَسْجِدُكُمْ هَذَا» لِمَسْجِدِ الْمَدِينَةِ، قَالَ: فَقُلْتُ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَاكَ هَكَذَا يَذْكُرُهُ.

– وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ، قَالَ سَعِيدٌ: أَخْبَرَنَا، وَقَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، وَلَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي سَعِيدٍ فِي الْإِسْنَادِ


Tamil-2701
Shamila-1398
JawamiulKalim-2485




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.