அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த மணவிருந்தைவிட “அதிகமாக” அல்லது “சிறப்பாக”த் தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் மணவிருந்தளிக்கவில்லை” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், (அனஸ் (ரலி) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணவிருந்தாக என்ன அளித்தார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “மக்களுக்கு ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக்கொடுத்தார்கள்; (உண்ண முடியாமல்) மக்கள் அதை விட்டுச்சென்றனர்” என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 16
(முஸ்லிம்: 2800)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ
«مَا أَوْلَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مِنْ نِسَائِهِ أَكْثَرَ – أَوْ أَفْضَلَ – مِمَّا أَوْلَمَ عَلَى زَيْنَبَ»، فَقَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ: بِمَا أَوْلَمَ؟ قَالَ: «أَطْعَمَهُمْ خُبْزًا وَلَحْمًا حَتَّى تَرَكُوهُ»
Tamil-2800
Shamila-1428
JawamiulKalim-2577
சமீப விமர்சனங்கள்