பாடம் : 17
மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் வேறொரு கணவனை மணந்து, அவன் அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டு,பின்னர் அவனும் மணவிலக்குச் செய்து, அவளது காத்திருப்புக் காலம் (இத்தா) முடியாத வரை அவள் முதல் கணவனுக்கு (வாழ்க்கைப்பட) அனுமதிக்கப்படமாட்டாள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ரிஃபாஆவிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, நான் (அவருக்குப் பிறகு) அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் அவர்களை மணமுடித்துக்கொண்டேன். அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது (இந்த முகத்திரைத்) துணியின் குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பின்னர், “நீ (உன் முதல் கணவர்) ரிஃபாஆவிடம் திரும்பிச்செல்ல விரும்புகிறாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (தமக்கு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவதை) எதிர்பார்த்தவராக வாசலில் இருந்தார். அவர், “அபூபக்ரே! இந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா? (நீங்கள் இவரைத் தடுக்கக் கூடாதா?” என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 16
(முஸ்லிம்: 2820)17 – بَابُ لَا تَحِلُّ الْمُطَلَّقَةُ ثَلَاثًا لِمُطَلِّقِهَا حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ، وَيَطَأَهَا، ثُمَّ يُفَارِقَهَا وَتَنْقَضِيَ عِدَّتُهَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَاللَّفْظُ لِعَمْرٍو، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: كُنْتُ عِنْدَ رِفَاعَةَ، فَطَلَّقَنِي، فَبَتَّ طَلَاقِي، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، وَإِنَّ مَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ، فَتَبَسَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ؟ لَا، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ، وَيَذُوقَ عُسَيْلَتَكِ»، قَالَتْ وَأَبُو بَكْرٍ عِنْدَهُ وَخَالِدٌ بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ، فَنَادَى: يَا أَبَا بَكْرٍ، أَلَا تَسْمَعُ هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟
Tamil-2820
Shamila-1433
JawamiulKalim-2595
சமீப விமர்சனங்கள்