ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
Book : 16
(முஸ்லிம்: 2830)حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ، عَنْ يَزِيدَ يَعْنِي ابْنَ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا مِنْ رَجُلٍ يَدْعُو امْرَأَتَهُ إِلَى فِرَاشِهَا، فَتَأْبَى عَلَيْهِ، إِلَّا كَانَ الَّذِي فِي السَّمَاءِ سَاخِطًا عَلَيْهَا حَتَّى يَرْضَى عَنْهَا»
Tamil-2830
Shamila-1436
JawamiulKalim-2603
Tamil 2830 …
Yen ipadi PATTA VISAYAM AANKAUKU MATUM
அஸ்ஸலாமு அலைக்கும்.
கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மிக அதிகமாகவே வலியுறுத்தியுள்ளனர். பார்க்க: …அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்!… (அல்குர்ஆன் 4: 19)
…உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரீ-1968)