தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2849

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு (“அல்ஃகீலா”) கொள்ளலாம்; அப்போது “புணர்ச்சி இடைமுறிப்பு”ச் செய்வது வெறுக்கத் தக்கதாகும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள (“அல்ஃகீலா”) வேண்டாமென நான் தடை விதிக்க விரும்பினேன். ரோமர்களும் பாரசீகர்களும் அவ்வாறு செய்தும், அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை நான் நினைவுகூர்ந்தேன் (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்).

இதை ஜுதாமா பின்த் வஹ்ப் அல் அசதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இவரது பெயர் ஜுஃதாமா என்று அறிவிப்பாளர் கலஃப் (ரஹ்) கூறுகிறார். ஆனால், யஹ்யா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளபடி “ஜுதாமா” (“ஃதால்” ஙு அல்ல; “தால்”கு) என்பதே சரி.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16

(முஸ்லிம்: 2849)

24 – بَابُ جَوَازِ الْغِيلَةِ، وَهِيَ وَطْءُ الْمُرْضِعِ، وَكَرَاهَةِ الْعَزْلِ

وحَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَاللَّفْظُ لَهُ، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ، حَتَّى ذَكَرْتُ أَنَّ الرُّومَ وَفَارِسَ يَصْنَعُونَ ذَلِكَ، فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ»، قَالَ مُسْلِمٌ: ” وَأَمَّا خَلَفٌ، فَقَالَ: عَنْ جُذَامَةَ الْأَسَدِيَّةِ، وَالصَّحِيحُ مَا قَالَهُ يَحْيَى: بِالدَّالِ


Tamil-2849
Shamila-1442
JawamiulKalim-2620




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.