ஸைனப் பின்த் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்க வில்லையா?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அபூஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார்; அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் – மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாமே!” என்று கூறினார்கள்.
Book : 17
(முஸ்லிம்: 2881)وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، قَالَتْ
قَالَتْ أُمُّ سَلَمَةَ، لِعَائِشَةَ، إِنَّهُ يَدْخُلُ عَلَيْكِ الْغُلَامُ الْأَيْفَعُ، الَّذِي مَا أُحِبُّ أَنْ يَدْخُلَ عَلَيَّ، قَالَ: فَقَالَتْ عَائِشَةُ: أَمَا لَكِ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْوَةٌ؟ قَالَتْ: إِنَّ امْرَأَةَ أَبِي حُذَيْفَةَ قَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ سَالِمًا يَدْخُلُ عَلَيَّ وَهُوَ رَجُلٌ، وَفِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْهُ شَيْءٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضِعِيهِ حَتَّى يَدْخُلَ عَلَيْكِ»
Tamil-2881
Shamila-1433
JawamiulKalim-2647
சமீப விமர்சனங்கள்