தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2954

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் என் கணவர் (மூன்றாவதாக) என்னைத் தலாக் சொல்லிவிட்டார். (“இத்தா”க் காலத்தில்) அவர் எனக்குக் குறைந்த அளவே ஜீவனாம்சம் வழங்கினார். அதை நான் கண்டதும், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதைப் பற்றி) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்; எனக்கு ஜீவனாம்சம் இருக்குமாயின், எனக்குத் தகுதியான (ஜீவனாம்சத்)தை நான் பெறுவேன். எனக்கு ஜீவனாம்சம் எதுவும் கிடையாதெனில் அவரிடமிருந்து நான் எதையும் பெற்றுக் கொள்ளமாட்டேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு ஜீவனாம்சமும் இல்லை; உறைவிடமும் இல்லை” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்கள் தலாக் சொல்லப்பட்டு “இத்தா” இருந்தபோது என்ன நடந்தது என்று) கேட்டேன். அதற்கு அவர், “மக்ஸூமி குலத்தைச் சேர்ந்தவரான என் கணவர் என்னைத் தலாக் சொல்லிவிட்டார். எனக்கு (“இத்தா”க் கால) ஜீவனாம்சம் வழங்க மறுத்தார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அதைப் பற்றி) அவர்களிடம் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு ஜீவனாம்சம் கிடையாது; நீ இடம்மாறி, (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் சென்று, அவரது இல்லத்தில் (இத்தா முடியும்வரை) இரு! ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். அவர் அருகில் உனது (துப்பட்டா) துணியைக் கழற்றிக்கொள்ளலாம்” என்றார்கள்.

Book : 18

(முஸ்லிம்: 2954)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ، وَقَالَ قُتَيْبَةُ أَيْضًا: حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ، كِلَاهُمَا عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ

أَنَّهُ طَلَّقَهَا زَوْجُهَا فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ أَنْفَقَ عَلَيْهَا نَفَقَةَ دُونٍ، فَلَمَّا رَأَتْ ذَلِكَ، قَالَتْ: وَاللهِ لَأُعْلِمَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنْ كَانَ لِي نَفَقَةٌ أَخَذْتُ الَّذِي يُصْلِحُنِي، وَإِنْ لَمْ تَكُنْ لِي نَفَقَةٌ لَمْ آخُذْ مِنْهُ شَيْئًا، قَالَتْ: فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا نَفَقَةَ لَكِ، وَلَا سُكْنَى»

– حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ قَالَ: سَأَلْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، فَأَخْبَرَتْنِي أَنَّ زَوْجَهَا الْمَخْزُومِيَّ طَلَّقَهَا، فَأَبَى أَنْ يُنْفِقَ عَلَيْهَا، فَجَاءَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَتْهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا نَفَقَةَ لَكِ، فَانْتَقِلِي فَاذْهَبِي إِلَى ابْنِ أُمِّ مَكْتُومٍ، فَكُونِي عِنْدَهُ، فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ عِنْدَهُ»


Tamil-2954
Shamila-1480
JawamiulKalim-2718,
2719




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.