ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது
உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து (இரண்டு நாட்கள் கழிந்து)விட்டபோது,அவர்கள் மஞ்சள் நிறமுடைய ஒரு வகை நறுமணப் பொருளைக் கொண்டுவருமாறு கூறி, அதைத் தமது முன்கையில் தடவிக்கொண்டார்கள். பிறகு “நான் இவ்வாறு செய்வதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும் (இறந்துபோன ஒருவருக்காக) மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!” என்று கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
– மேற்கண்ட ஹதீஸை, ஸைனப் பின்த் அபீ சலமா (ரலி) அவர்கள் தம் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தும், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அல்லது வேறொரு துணைவியாரிடமிருந்தும் அறிவித்துள்ளார்கள்.
Book : 18
(முஸ்லிம்: 2976)وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، قَالَ: سَمِعْتُ زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ، قَالَتْ
تُوُفِّيَ حَمِيمٌ لِأُمِّ حَبِيبَةَ، فَدَعَتْ بِصُفْرَةٍ، فَمَسَحَتْهُ بِذِرَاعَيْهَا، وَقَالَتْ: إِنَّمَا أَصْنَعُ هَذَا لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ فَوْقَ ثَلَاثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
– وَحَدَّثَتْهُ زَيْنَبُ، عَنْ أُمِّهَا، وَعَنْ زَيْنَبَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ عَنِ امْرَأَةٍ مِنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Tamil-2976
Shamila-1486
JawamiulKalim-2741
சமீப விமர்சனங்கள்