தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2983

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது;கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அந்நாட்களில்) அவள் சாயமிடப்பட்ட ஆடையை அணியமாட்டாள்;நெய்வதற்கு முன் நூலில் சாயமேற்றப்பட்டு, பின்பு நெய்யப்பட்ட ஆடையைத் தவிர! மேலும், அவள் அஞ்சனம் தீட்டிக் கொள்ளமாட்டாள்; நறுமணம் பூசிக்கொள்ளமாட்டாள்; ஆனால் (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்த பின்னர் தவிர! அப்போது “குஸ்த்” மற்றும் “அழ்ஃபார்” ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்வாள்.

இதை உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர!” என இடம்பெற்றுள்ளது.

Book : 18

(முஸ்லிம்: 2983)

وحَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ هِشَامٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَا تُحِدُّ امْرَأَةٌ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ، إِلَّا عَلَى زَوْجٍ، أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلَا تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا، إِلَّا ثَوْبَ عَصْبٍ، وَلَا تَكْتَحِلُ، وَلَا تَمَسُّ طِيبًا، إِلَّا إِذَا طَهُرَتْ، نُبْذَةً مِنْ قُسْطٍ أَوْ أَظْفَارٍ»

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، ح وحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، كِلَاهُمَا عَنْ هِشَامٍ، بِهَذَا الْإِسْنَادِ. وَقَالَا: «عِنْدَ أَدْنَى طُهْرِهَا نُبْذَةً مِنْ قُسْطٍ وَأَظْفَارٍ»


Tamil-2983
Shamila-938
JawamiulKalim-2747




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.