தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2984

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் (பெண்களாகிய) நாங்கள் துக்கம் கடைப்பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அதாவது “இத்தா”வில் இருக்கும்போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக்கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); (பெண்களாகிய) எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து குளித்துத் தூய்மையடையும்போது “குஸ்த்” மற்றும் “அழ்ஃபார்” ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டையால் நறுமணப் புகையிட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

Book : 18

(முஸ்லிம்: 2984)

وحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ

«كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلَا نَكْتَحِلُ، وَلَا نَتَطَيَّبُ، وَلَا نَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا، وَقَدْ رُخِّصَ لِلْمَرْأَةِ فِي طُهْرِهَا إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا، فِي نُبْذَةٍ مِنْ قُسْطٍ وَأَظْفَارٍ»


Tamil-2984
Shamila-938
JawamiulKalim-2748




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.