தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2995

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் (லிஆன் பற்றிக்) கேட்டேன். (ஏனெனில்,) அதைப் பற்றிய அறிவு அவர்களிடம் இருப்பதாக நான் கருதினேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள், (கர்ப்பவதியான) தம் மனைவிக்கு ஷரீக் பின் சஹ்மா என்பாருடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். ஷரீக் பின் சஹ்மா, பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் (பால்குடி) தாய்வழிச் சகோதரராய் இருந்தார். ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களே இஸ்லாத்தில் ஆரம்பமாக “லிஆன்” செய்தவர் ஆவார்கள். ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் செய்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தப் பெண்ணைக் கவனித்துவாருங்கள்; இவள் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான முடியுடைய, கலங்கிய கண்களுடைய வெள்ளை நிறக்குழந்தையைப் பெற்றெடுத்தால், அது ஹிலால் பின் உமய்யாவுக்கு உரியதாகும்; சுருட்டை முடியுடைய, மெலிந்த கணைக் கால்கள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால், அது ஷரீக் பின் சஹ்மாவுக்கு உரியதாகும்” என்றார்கள். பின்னர் அப்பெண் சுருட்டை முடியுடைய மெலிந்த கணைக் கால்கள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையையே பெற்றெடுத்தாள் என எனக்குத் தகவல் எட்டியது.

Book : 19

(முஸ்லிம்: 2995)

وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، قَالَ

سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، وَأَنَا أُرَى أَنَّ عِنْدَهُ مِنْهُ عِلْمًا، فَقَالَ: إِنَّ هِلَالَ بْنَ أُمَيَّةَ قَذَفَ امْرَأَتَهُ بِشَرِيكِ ابْنِ سَحْمَاءَ، وَكَانَ أَخَا الْبَرَاءِ بْنِ مَالِكٍ لِأُمِّهِ، وَكَانَ أَوَّلَ رَجُلٍ لَاعَنَ فِي الْإِسْلَامِ، قَالَ: فَلَاعَنَهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْصِرُوهَا، فَإِنْ جَاءَتْ بِهِ أَبْيَضَ سَبِطًا قَضِيءَ الْعَيْنَيْنِ فَهُوَ لِهِلَالِ بْنِ أُمَيَّةَ، وَإِنْ جَاءَتْ بِهِ أَكْحَلَ جَعْدًا حَمْشَ السَّاقَيْنِ فَهُوَ لِشَرِيكِ ابْنِ سَحْمَاءَ»، قَالَ: فَأُنْبِئْتُ أَنَّهَا جَاءَتْ بِهِ أَكْحَلَ جَعْدًا حَمْشَ السَّاقَيْنِ


Tamil-2995
Shamila-1496
JawamiulKalim-2757




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.