தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3002

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான குழந்தையைப் பிரசவித்துள்ளாள் (அது என் குழந்தையா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது)” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றின் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு” என்றார். “அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், “(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன” என்று பதிலளித்தார். “(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எப்படி வந்தது?” என்று நபியவர்கள் கேட்க, அவர் “அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(உன்னுடைய) இந்தக் குழந்தையும் அதன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 19

(முஸ்லிம்: 3002)

وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَاللَّفْظُ لِقُتَيْبَةَ، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

جَاءَ رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا أَلْوَانُهَا؟» قَالَ: حُمْرٌ، قَالَ: «هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ؟» قَالَ: إِنَّ فِيهَا لَوُرْقًا، قَالَ: «فَأَنَّى أَتَاهَا ذَلِكَ؟» قَالَ: عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ، قَالَ: «وَهَذَا عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ»


Tamil-3002
Shamila-1500
JawamiulKalim-2764




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.