தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3008

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வரும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:

அவரிடம் (போதிய) செல்வம் இல்லையென்றால், அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்படும். பின்னர், விடுதலை அளிக்காதவரின் பங்கிற்காக அவன் உழைக்க அனுமதிக்கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரலாகாது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “அவனை ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. (“அந்த அடிமையின் விலை” எனும் சொற்றொடர் காணப்படவில்லை.)

Book : 20

(முஸ்லிம்: 3008)

وَحَدَّثَنَاهُ عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى يَعْنِي ابْنَ يُونُسَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ بِهَذَا الْإِسْنَادِ، وَزَادَ

إِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ قُوِّمَ عَلَيْهِ الْعَبْدُ قِيمَةَ عَدْلٍ، ثُمَّ يُسْتَسْعَى فِي نَصِيبِ الَّذِي لَمْ يُعْتِقْ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ

– حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ بِهَذَا الْإِسْنَادِ، بِمَعْنَى حَدِيثِ ابْنِ أَبِي عَرُوبَةَ، وَذَكَرَ فِي الْحَدِيثِ قُوِّمَ عَلَيْهِ قِيمَةَ عَدْلٍ


Tamil-3008
Shamila-1503
JawamiulKalim-2768




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.