ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீராவால் மூன்று தீர்வுகள் (நமக்கு) கிட்டின:
1. அவருடைய உரிமையாளர்கள் அவருடைய வாரிசுரிமை தமக்கே உரியது என நிபந்தனையிட்டு, அவரை விற்பதற்கு முன் வந்தனர். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது “நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.
2. அவர் விடுதலை செய்யப்பட்டபோது, (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்பஉரிமை வழங்கினார்கள். அப்போது அவர் தம்மையே (அதாவது தனித்து வாழ்வதையே) தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
3. மக்கள் அவருக்கு தர்மப்பொருட்களை வழங்குவார்கள்; (அவற்றை) அவர் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார். அது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “இது அவருக்குத் தர்மமாகும்; உங்களுக்கு அது அன்பளிப்பாகும். எனவே, அதை நீங்கள் உண்ணலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 20
(முஸ்லிம்: 3014)حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَاللَّفْظُ لِزُهَيْرٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
كَانَ فِي بَرِيرَةَ ثَلَاثُ قَضِيَّاتٍ: أَرَادَ أَهْلُهَا أَنْ يَبِيعُوهَا وَيَشْتَرِطُوا وَلَاءَهَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلَاءَ لِمَنْ أَعْتَقَ» قَالَتْ: وَعَتَقَتْ، فَخَيَّرَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَارَتْ نَفْسَهَا، قَالَتْ: وَكَانَ النَّاسُ يَتَصَدَّقُونَ عَلَيْهَا وَتُهْدِي لَنَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَكُمْ هَدِيَّةٌ، فَكُلُوهُ»
Tamil-3014
Shamila-1504
JawamiulKalim-2772
சமீப விமர்சனங்கள்