ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அன்சாரிகளில் சிலரிடமிருந்து (அவர்களின் அடிமையாக இருந்த) பரீராவை விலைக்குக் கேட்டேன். அப்போது அவர்கள் அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(விடுதலை எனும்) உபகாரம் செய்தவருக்கே வாரிசாகும் உரிமை உண்டு”என்று கூறினார்கள்.
(விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்ப உரிமை அளித்தார்கள். அவருடைய கணவரும் அடிமையாகவே இருந்தார்.
பரீரா (ஒரு முறை) எனக்கு அன்பளிப்பாக இறைச்சியை வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த இறைச்சியிலிருந்து நமக்கு (உணவு) தயாரித்திருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். நான், “இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாயிற்றே?” என்றேன். அதற்கு “இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்” என்றார்கள்.
Book : 20
(முஸ்லிம்: 3015)وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ
أَنَّهَا اشْتَرَتْ بَرِيرَةَ مِنْ أُنَاسٍ مِنَ الْأَنْصَارِ وَاشْتَرَطُوا الْوَلَاءَ، فَقَالَ: رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوَلَاءُ لِمَنْ وَلِيَ النِّعْمَةَ»، وَخَيَّرَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ زَوْجُهَا عَبْدًا، وَأَهْدَتْ لِعَائِشَةَ لَحْمًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ صَنَعْتُمْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ»، قَالَتْ عَائِشَةُ: تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ»
Tamil-3015
Shamila-1504
JawamiulKalim-2773
சமீப விமர்சனங்கள்