சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், மர்வான் பின் அல்ஹகமிடம், “வட்டி வியாபாரத்திற்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மர்வான், “நான் (அவ்வாறு) செய்யவில்லையே!” என்றார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(அரசாங்கம் வழங்கும்) உணவு அட்டைகளை விற்பதற்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உணவுப்பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன் அதை (மற்றவரிடம்) விற்பதற்குத் தடை விதித்துள்ளார்களே!” என்று கூறினார்கள். பின்னர் மர்வான் மக்களுக்கு உரையாற்றுகையில், உணவு அட்டையை விற்பதற்குத் தடை விதித்தார்.
உடனே காவலர்கள் மக்களின் கரங்களிலிருந்து அந்த உணவு அட்டைகளைப் பறித்ததை நான் பார்த்தேன்.
Book : 21
(முஸ்லிம்: 3069)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّهُ قَالَ لِمَرْوَانَ: أَحْلَلْتَ بَيْعَ الرِّبَا، فَقَالَ مَرْوَانُ: مَا فَعَلْتُ؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «أَحْلَلْتَ بَيْعَ الصِّكَاكِ، وَقَدْ نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الطَّعَامِ حَتَّى يُسْتَوْفَى»، قَالَ: فَخَطَبَ مَرْوَانُ النَّاسَ، «فَنَهَى عَنْ بَيْعِهَا»، قَالَ سُلَيْمَانُ: فَنَظَرْتُ إِلَى حَرَسٍ يَأْخُذُونَهَا مِنْ أَيْدِي النَّاسِ
Tamil-3069
Shamila-1528
JawamiulKalim-2826
சமீப விமர்சனங்கள்