நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் பனூலைஸ் குலத்தாரில் ஒருவரும் நானும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது பனூலைஸ் குலத்தைச் சேர்ந்த அம்மனிதர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்பதையும், சரிக்குச் சரியாகவே தவிர தங்கத்திற்குத் தங்கத்தை விற்பதையும் தடைசெய்தார்கள்” எனத் தாங்கள் தெரிவித்ததாக இதோ இவர் (இப்னு உமர்) என்னிடம் கூறினாரே (அது உண்மையா?)” என்று கேட்டார்.
அதற்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், தம்மிரு கண்களையும் காதுகளையும் நோக்கி சைகை செய்து “என்னிரு கண்களும் பார்த்தன; என்னிரு காதுகளும் கேட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும் விற்காதீர்கள்; அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ குறைத்தோ)விடாதீர்கள். அவற்றில் ரொக்கமாகவுள்ள ஒன்றைத் தவணைக்குப் பகரமாக விற்காதீர்கள்;உடனுக்குடன் மாற்றிக்கொண்டாலே தவிர” என்று கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “பனூலைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அபூசயீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பின்வரும் ஹதீஸை அறிவித்தார்கள்” என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 22
(முஸ்லிம்: 3228)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ
أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ لَهُ رَجُلٌ مِنْ بَنِي لَيْثٍ: إِنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَأْثُرُ هَذَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رِوَايَةِ قُتَيْبَةَ، فَذَهَبَ عَبْدُ اللهِ، وَنَافِعٌ مَعَهُ، وَفِي حَدِيثِ ابْنِ رُمْحٍ: قَالَ نَافِعٌ: فَذَهَبَ عَبْدُ اللهِ وَأَنَا مَعَهُ وَاللَّيْثِيُّ، حَتَّى دَخَلَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، فَقَالَ: إِنَّ هَذَا أَخْبَرَنِي أَنَّكَ تُخْبِرُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الْوَرِقِ بِالْوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ، وَعَنْ بَيْعِ الذَّهَبِ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ “، فَأَشَارَ أَبُو سَعِيدٍ بِإِصْبَعَيْهِ إِلَى عَيْنَيْهِ وَأُذُنَيْهِ، فَقَالَ: أَبْصَرَتْ عَيْنَايَ، وَسَمِعَتْ أُذُنَايَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ، وَلَا تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ، إِلَّا مِثْلًا بِمِثْلٍ، وَلَا تُشِفُّوا بَعْضَهُ عَلَى بَعْضٍ، وَلَا تَبِيعُوا شَيْئًا غَائِبًا مِنْهُ بِنَاجِزٍ، إِلَّا يَدًا بِيَدٍ»
– حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، كُلُّهُمْ عَنْ نَافِعٍ، بِنَحْوِ حَدِيثِ اللَّيْثِ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Tamil-3228
Shamila-1584
JawamiulKalim-2973
சமீப விமர்சனங்கள்