தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-325

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு “லா இலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறிய எவரது உள்ளத்தில் மணிக்கோதுமையளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப் படுவார். பிறகு “லா இலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறிய எவரது உள்ளத்தில் அணுவளவு அளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஹம்மத் பின் மின்ஹால் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும்போது (பின் வருமாறு) யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாகக் குறிப்பிட்டார்கள்:

நான் ஷுஅபா (ரஹ்) அவர்களைச் சந்திக்கும்போது இந்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது ஷுஅபா (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும், அன்னாரிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்களும் எமக்கு அறிவித்தார்கள்” என்றார்கள். ஆனால், ஷுஅபா (ரஹ்) அவர்கள் (“அணுவளவு என்பதைக் குறிக்க,) “தர்ரா” எனும் சொல்லுக்கு பதிலாக “துரா” எனும் சொல்லைக் கூறியுள்ளார்கள். அபூபிஸ்தாம் (என்ற ஷுஅபா) அவர்கள்தாம் இவ்வாறு மாற்றியுள்ளார்கள்.

Book : 1

(முஸ்லிம்: 325)

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، وَهِشَامٌ صَاحِبُ الدَّسْتَوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. ح وَحَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

يَخْرُجُ مِنَ النَّارِ مِنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً، ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مِنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً، ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مِنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ ذَرَّةً “. زَادَ ابْنُ مِنْهَالٍ فِي رِوَايَتِهِ: قَالَ: يَزِيدُ، فَلَقِيتُ شُعْبَةَ فَحَدَّثْتُهُ بِالْحَدِيثِ، فَقَالَ شُعْبَةُ: حَدَّثَنَا بِهِ قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَدِيثِ، إِلَّا أَنَّ شُعْبَةَ جَعَلَ مَكَانَ الذَّرَّةِ ذُرَةً، قَالَ يَزِيدُ: صَحَّفَ فِيهَا أَبُو بِسْطَامَ


Tamil-325
Shamila-193
JawamiulKalim-290




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.