தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3408

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

அடிமைகளுடனான நல்லுறவும் அடிமையின் கன்னத்தில் அறைந்துவிட்டவர் செய்ய வேண்டிய பரிகாரமும்.

 ஸாதான் அபீஉமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் அடிமையை விடுதலை செய்திருந்தார்கள். பின்னர் தரையிலிருந்து ஒரு குச்சியை, அல்லது வேறு ஏதோ ஒரு பொருளை எடுத்துக்காட்டி, “இதற்குச் சமமான நற்பலன்கூட இ(ந்த அடிமையை விடுதலை செய்த)தில் எனக்குக் கிடைக்காது. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால், அல்லது அடித்துவிட்டால், அவரை விடுதலை செய்து விடுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

Book : 27

(முஸ்லிம்: 3408)

8 – بَابُ صُحْبَةِ الْمَمَالِيكِ، وَكَفَّارَةِ مَنْ لَطَمَ عَبْدَهُ

حَدَّثَنِي أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ زَاذَانَ أَبِي عُمَرَ، قَالَ

أَتَيْتُ ابْنَ عُمَرَ وَقَدْ أَعْتَقَ مَمْلُوكًا، قَالَ: فَأَخَذَ مِنَ الْأَرْضِ عُودًا أَوْ شَيْئًا، فَقَالَ: مَا فِيهِ مِنَ الْأَجْرِ مَا يَسْوَى هَذَا، إِلَّا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَطَمَ مَمْلُوكَهُ، أَوْ ضَرَبَهُ، فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ»


Tamil-3408
Shamila-1657
JawamiulKalim-3138




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.