ஸாதான் அபீஉமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் அடிமை ஒருவரை அழைத்து, அவரது முதுகில் ஏற்பட்டிருந்த வடுவைப் பார்த்தார்கள். அவரிடம், “வலிக்கும்படி அடித்து விட்டேனா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ விடுதலை செய்யப்பட்டவன் ஆவாய்” என்று கூறிவிட்டார்கள். பிறகு தரையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துக்காட்டி, இதன் எடைக்குச் சமமான நன்மைகூட எனக்கு இதில் கிடைக்காது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒருவர் தம்முடைய அடிமையை அவர் செய்யாத குற்றத்திற்காகத் தண்டித்துவிட்டால், அல்லது அறைந்துவிட்டால் அவரை விடுதலை செய்துவிடுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “அவர் செய்யாத குற்றத்திற்காகத் தண்டித்துவிட்டால்” எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால்” என்றே இடம்பெற்றுள்ளது. “அவர் செய்யாத குற்றத்திற்காக” எனும் குறிப்பு அதில் இடம்பெறவில்லை.
Book : 27
(முஸ்லிம்: 3409)وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فِرَاسٍ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ زَاذَانَ
أَنَّ ابْنَ عُمَرَ، دَعَا بِغُلَامٍ لَهُ فَرَأَى بِظَهْرِهِ أَثَرًا، فَقَالَ لَهُ: أَوْجَعْتُكَ؟ قَالَ: لَا، قَالَ: فَأَنْتَ عَتِيقٌ، قَالَ: ثُمَّ أَخَذَ شَيْئًا مِنَ الْأَرْضِ، فَقَالَ: مَا لِي فِيهِ مِنَ الْأَجْرِ مَا يَزِنُ هَذَا، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ ضَرَبَ غُلَامًا لَهُ حَدًّا لَمْ يَأْتِهِ، أَوْ لَطَمَهُ، فَإِنَّ كَفَّارَتَهُ أَنْ يُعْتِقَهُ»
– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، كِلَاهُمَا عَنْ سُفْيَانَ، عَنْ فِرَاسٍ، بِإِسْنَادِ شُعْبَةَ، وَأَبِي عَوَانَةَ، أَمَّا حَدِيثُ ابْنِ مَهْدِيٍّ، فَذَكَرَ فِيهِ «حَدًّا لَمْ يَأْتِهِ»، وَفِي حَدِيثِ وَكِيعٍ: «مَنْ لَطَمَ عَبْدَهُ»، وَلَمْ يَذْكُرِ الْحَدَّ
Tamil-3409
Shamila-1657
JawamiulKalim-3139
சமீப விமர்சனங்கள்