தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3503

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை உண்டு.

 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விபச்சாரம் புரிந்துவிட்ட ஒரு யூத ஆணும் யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். யூதர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து “விபச்சாரம் செய்துவிட்டவனுக்கு (அளிக்கப்படும் தண்டனை குறித்து) நீங்கள் (உங்களுடைய) “தவ்ராத்” (வேதத்)தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு யூதர்கள், “அவர்கள் இருவர் முகத்திலும் கரி பூசி, அவர்களிருவரையும் ஒட்டகத்தில் ஏற்றி, முகம் திருப்பி அமரவைப்போம். பின்னர் அவ்விருவரும் (ஊரைச்) சுற்றிக் கொண்டு வரப்படுவர்” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் உண்மையாளர்களாயின் ‘தவ்ராத்”தைக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ‘தவ்ராத்”தைக் கொண்டுவந்து வாசித்துக்காட்டினர். கல்லெறி தண்டனை குறித்த வசனம் வந்தபோது, அதை வாசித்துக் கொண்டிருந்த (யூத) இளைஞர் அந்த வசனத்தின் மீது தமது கையை வைத்து (மறைத்து)க் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை வாசித்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யூதமத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “அவரைக் கையை எடுக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். உடனே அந்த இளைஞர் தமது கையை எடுத்தார். அங்கே (விபச்சாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி கூறும் வசனம் இருந்தது. ஆகவே,அவ்விருவரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது.

அவர்கள்மீது கல்லெறிந்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அந்தப் பெண்ணைக் கல்லடியிலிருந்து காப்பதற்காக அந்த யூதர் தமது உடலால் அவளை மறைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

Book : 29

(முஸ்லிம்: 3503)

6 – بَابُ رَجْمِ الْيَهُودِ أَهْلِ الذِّمَّةِ فِي الزِّنَى

حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِيَهُودِيٍّ وَيَهُودِيَّةٍ قَدْ زَنَيَا، فَانْطَلَقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَاءَ يَهُودَ، فَقَالَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ عَلَى مَنْ زَنَى؟» قَالُوا: نُسَوِّدُ وُجُوهَهُمَا، وَنُحَمِّلُهُمَا، وَنُخَالِفُ بَيْنَ وُجُوهِهِمَا، وَيُطَافُ بِهِمَا، قَالَ: «فَأْتُوا بِالتَّوْرَاةِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ»، فَجَاءُوا بِهَا فَقَرَءُوهَا حَتَّى إِذَا مَرُّوا بِآيَةِ الرَّجْمِ وَضَعَ الْفَتَى الَّذِي يَقْرَأُ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، وَقَرَأَ مَا بَيْنَ يَدَيْهَا، وَمَا وَرَاءَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ سَلَامٍ: وَهُوَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيَرْفَعْ يَدَهُ، فَرَفَعَهَا فَإِذَا تَحْتَهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُجِمَا، قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: كُنْتُ فِيمَنْ رَجَمَهُمَا، فَلَقَدْ رَأَيْتُهُ يَقِيهَا مِنَ الْحِجَارَةِ بِنَفْسِهِ


Tamil-3503
Shamila-1699
JawamiulKalim-3217




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.