அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “(சாகும்வரை) கல்லால் அடிக்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (நிறைவேற்றினார்கள்)” என்று பதிலளித்தார்கள். நான், குர்ஆனில் ‘அந்நூர்” எனும் (24 ஆவது) அத்தியாயம் அருளப்பெறுவதற்கு முன்பா? அல்லது அதற்குப் பின்பா (எப்போது அந்தத் தண்டனையை நிறைவேற்றினார்கள்)?” என்று கேட்டேன். அவர்கள் “எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 29
(முஸ்லிம்: 3506)وحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، قَالَ
سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي أَوْفَى، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، قَالَ: سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي أَوْفَى، هَلْ رَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: قُلْتُ: بَعْدَ مَا أُنْزِلَتْ سُورَةُ النُّورِ أَمْ قَبْلَهَا؟ قَالَ: «لَا أَدْرِي»
Tamil-3506
Shamila-1702
JawamiulKalim-3220
சமீப விமர்சனங்கள்