அறப்போரும் வழிகாட்டு நெறிகளும்
பாடம் : 1
இஸ்லாமிய அழைப்புச் செய்தி எட்டிய பிறகும் அதை ஏற்க மறு(த்து தாக்குதல் தொடுக்க ஆயத்தமாக இரு)ப்போர்மீது முன்னறிவிப்பின்றி தாக்குதல் தொடுப்பது செல்லும்.
இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எதிரிகள்மீது) தாக்குதல் தொடுப்பதற்கு முன் அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பது பற்றிக் கேட்டு நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு பதில் எழுதினார்கள்.
அதில் அவர்கள், “இஸ்லாத்தின் ஆரம்பத்தில்தான் இவ்வாறு (அழைப்பு விடுக்கும் வழக்கம்) இருந்தது. (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பனுல் முஸ்தலிக்” குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போர் வீரர்களைக் கொன்றார்கள்; (பெண்கள், சிறார்கள் ஆகியோரைக்) கைதிகளாகப் பிடித்தார்கள்.
அன்றுதான் ஜுவைரியா (ரலி) அவர்களை, அல்லது பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக் கொண்டார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அப்போது (நபியவர்களின்) அப்படையில் இருந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சுலைம் பின் அக்ளர் (ரஹ்) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் ஜுவைரியாவை உரிமையாக்கிக்கொண்டார்கள்” என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன். ஆனால், “பின்துல் ஹாரிஸை” என்று அவர் சொன்னது உறுதி.
– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக்கொண்டார்கள்” என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது.
Book : 32
32 – كِتَابُ الْجِهَادِ وَالسِّيَرِ
1 – بَابُ جَوَازِ الْإِغَارَةِ عَلَى الْكُفَّارِ الَّذِينَ بَلَغَتْهُمْ دَعْوَةُ الْإِسْلَامِ، مِنْ غَيْرِ تَقَدُّمِ الْإِعْلَامِ بِالْإِغَارَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، حَدَّثَنَا سُلَيْمُ بْنُ أَخْضَرَ، عَنِ ابْنِ عَوْنٍ، قَالَ
كَتَبْتُ إِلَى نَافِعٍ أَسْأَلُهُ عَنِ الدُّعَاءِ قَبْلَ الْقِتَالِ، قَالَ: فَكَتَبَ إِلَيَّ: ” إِنَّمَا كَانَ ذَلِكَ فِي أَوَّلِ الْإِسْلَامِ، قَدْ أَغَارَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَنِي الْمُصْطَلِقِ وَهُمْ غَارُّونَ، وَأَنْعَامُهُمْ تُسْقَى عَلَى الْمَاءِ، فَقَتَلَ مُقَاتِلَتَهُمْ، وَسَبَى سَبْيَهُمْ، وَأَصَابَ يَوْمَئِذٍ – قَالَ يَحْيَى: أَحْسِبُهُ قَالَ – جُوَيْرِيَةَ – أَو قَالَ: الْبَتَّةَ – ابْنَةَ الْحَارِثِ “، وَحَدَّثَنِي هَذَا الْحَدِيثَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، وَكَانَ فِي ذَاكَ الْجَيْشِ
– وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ. وَقَالَ: جُوَيْرِيَةَ بِنْتَ الْحَارِثِ وَلَمْ يَشُكَّ
Tamil-3564
Shamila-1730
JawamiulKalim-3266
சமீப விமர்சனங்கள்