தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3607

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “மூத்தா போரின்போது ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் நானும் இருந்தேன். படையினருக்கு உதவி செய்ய யமனிலிருந்து ஒருவர் என்னுடன் வந்திருந்தார்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஆயினும், அதில் “அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் “காலித் (ரலி) அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரியைக் கொன்றவருக்கே அவரால் கொல்லப்பட்டவரின் உடைமைகள் உரியவை எனத் தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள் “ஆம்; ஆயினும், நான் அதை அதிகமாகக் கருதுகிறேன்” என்று விடையளித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 32

(முஸ்லிம்: 3607)

وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ، قَالَ

خَرَجْتُ مَعَ مَنْ خَرَجَ مَعَ زَيْدِ بْنِ حَارِثَةَ فِي غَزْوَةِ مُؤْتَةَ، وَرَافَقَنِي مَدَدِيٌّ مِنَ الْيَمَنِ، وَسَاقَ الْحَدِيثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ، غَيْرَ أَنَّهُ قَالَ فِي الْحَدِيثِ: قَالَ عَوْفٌ: فَقُلْتُ: يَا خَالِدُ، أَمَا عَلِمْتَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِالسَّلَبِ لِلْقَاتِلِ، قَالَ: بَلَى، وَلَكِنِّي اسْتَكْثَرْتُهُ


Tamil-3607
Shamila-1753
JawamiulKalim-3303




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.